முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 ஆண்டுகளுக்குப்பிறகு இடைநிறுத்தப்பட்ட கல்வியை தொடரும் ஒடிசா எம்.எல்.ஏ

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2022      இந்தியா
Angada-Kanhar 2022-04-30

Source: provided

புவனேஸ்வர் : குடும்ப சூழ்நிலையால் இடைநிறுத்தப்பட்ட கல்வியை 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒடிசா எம்.எல்.ஏ. தொடர்ந்துள்ளார். 

ஒடிசா மாநிலம் புல்பானியைச் சேர்ந்தவர் அங்கதா கன்ஹர் (58). பிஜூ ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ.வான குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 1978-ம் ஆண்டு கல்வியை விட்டு விலிகினார். கல்வியை தொடர முடியவில்லையே என்ற ஆதங்கம் அங்கதா கன்ஹருக்கு ரொம்ப நாளாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கல்வி கற்க வயது தடையில்லை என்ற பழமொழியை நிரூபிக்கும் வகையில், கன்ஹர் தற்போது ஒடிசாவில் நடைபெற்று வரும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார்.   

அதன்படி, இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் 10-ம் வகுப்புக்கான தனியார் தேர்வில், எம்.எல்.ஏ. அங்கதா கன்ஹர் நேற்று முன்தினம் தனது இரு நண்பர்களுடன் ருஜாங்கி உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் பாடத்தின் முதல் தாள் தேர்வு எழுதினார். தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்பு, கன்ஹர் கூறுகையில், 

நான் 1978-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் சில குடும்பப் பிரச்சினையால் தேர்வு எழுத முடியவில்லை. சமீபத்தில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பலர் தேர்வு எழுதுகிறார்கள் என்று என்னிடம் கூறப்பட்டது. அதனால் நானும் தேர்வு எழுத முடிவு செய்தேன். பரீட்சை எழுதுவதற்கோ, கல்வி கற்பதற்கோ வயது ஒரு தடை இல்லை என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து