எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதிற்கு நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிவரஞ்சனியும் சில பெண்களும் திரைப்படம் சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப்போனது. இந்நிலையில், 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'சூரரைப் போற்று' திரைப்படம் ஐந்து பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சூரரைப் போற்று இதில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும் சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சிறந்த பிண்ணனி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் சிறந்த திரைக்கதைக்கான விருது ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதாகொங்கரா இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பியூச்சர் ஃபிலிம் 'சூரரைப் போற்று' படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, படக்குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
தேசிய விருதுகள் விவரம்:
சிறந்த நடிகர்: இந்த விருது இரண்டு நடிகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சூரரைப்போற்று படத்துக்காக சூர்யாவுக்கும், 'தி அன்சங் வாரியர்' படத்துக்காக அஜய் தேவ்கன்னுக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகை: ’சூரரைப்போற்று’ படத்துக்காக அபர்ணா பாலமுரளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த உறுதுணை நடிகர் (பெண்): சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்துக்காக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தமிழ்ப் படம்: சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வசந்த் இயக்கியிருந்தார். சிறந்த மலையாளப் படமாக 'திங்கலஞ்ச நிச்சயம்' (Thinkalazhcha Nishchayam) படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை): தமிழில் 'சூரரைப்போற்று' படத்தின் சிறந்த பிண்ணனி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பெஸ்ட் எடிட்டிங்: 'சிவரஞ்சினியும் சில பெண்களும்' படத்துக்காக எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத்துக்கு தேசிய விருது அறிவிப்பு.
சிறந்த திரைக்கதை: ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதாகொங்காரா இருவருக்கும் 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் சிறந்த திரைக்கதைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பியூச்சர் ஃபிலிம் : 'சூரரைப்போற்று’ படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைக்கதை வசன எழுத்தாளர் best screenplay (diologue writer): 'மண்டேலா' படத்தின் சிறந்த திரைக்கதை வசன எழுத்தாளர் விருது மடோனே அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது: மண்டேலா படத்துக்காக அதன் இயக்குநர் மடோனாஸ் அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெஸ்ட் ஸ்டண்ட் விருது: 'அய்யப்பனும் கோஷியும்' படத்துக்காக ராஜசேகர், மாஃபியா சசி மற்றும் சுப்ரீம் சுந்தர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இசையமைப்பாளர் விருது: தெலுங்கில் வெளியான 'ஆலா வைகுந்தபுரமுலோ' படத்தின் இசையமைப்புக்காக இசையமைப்பாளர் தமன் சிறந்த இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிறந்த பெண் பின்னணி பாடகர்: 'அய்யப்பனும் கோஷியும்' படத்துக்காக நஞ்சம்மாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆண் பின்னணி பாடகர் விருது ராகுல் தேஷ் பாண்டே 'மீ வசந்தராவ்' மராத்தி படத்துக்கு அறிவிக்கப்பட்டது.
சிறந்த உறுதுணை நடிகர்: அய்யப்பனும் கோஷியும் படத்துக்காக பிஜூ மேனனுக்கு அறிவிக்கப்பட்டது.
சிறந்த இயக்குநர்: அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கிய கே.ஆர்.சச்சிதானந்தனுக்கு (மறைவு) சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறவிக்கப்பட்டுள்ளது.
பெஸ்ட் புக் ஆன் சினிமா: கிஸ்வர் தேசாய் எழுதிய 'தி லாங்கஸ்ட் கிஸ்' புத்தகத்துக்கு வழங்கப்பட்டது.
திரைப்படங்களுக்கு உகந்த மாநிலமாக (Most Film Friendly State) மத்தியப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய விருதுகளுக்காக மொத்தம் 305 படங்கள் 30 மொழிகளில் அனுப்பப்பட்டன. அதில் மேற்கண்டவை சிறந்தவையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது
04 May 2024புதுடெல்லி:நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்ம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-05-2024
05 May 2024