முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம்

வெள்ளிக்கிழமை, 28 அக்டோபர் 2022      சினிமா
Nitham-oru-vaanam 2022-10-2

Source: provided

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”நித்தம் ஒரு வானம்”. இந்த படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, இந்த படம் குறித்து இயக்குனர் கார்த்தி அளித்த பேட்டியில், இதில் மூன்று கதாநாயகிகள் கதைக்கு தேவை என்பதால் இருக்கிறார்கள். இந்த படம் முடிந்து வெளியே வரும்போது சர்ப்ரைசாக ஒன்று இருக்கும் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் படம் பற்றி பேசிய நாயகன் அசோக் செல்வன், இந்த படத்தின் மூலம் தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்றி விட்டதாக சொன்னார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து