முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செபி தலைவரிடம் விசாரணை நடத்த பார்லி. குழு திட்டம்

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      இந்தியா
Madhavi 2024-09-04

புது டெல்லி,  செபி தலைவர் மாதவி புரியிடம் விசாரணை நடத்த பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செபி எனப்படும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவராக இருப்பவர் மாதவி புரி புச். இவரும், கணவர் தவல் புச் ஆகியோர் அதானி குழுமத்தின் சட்டவிரோத முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் குற்றம்சாட்டியது.

 இதனையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 

ஆனால், மாதவி புரி புச் தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இவருக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. இந்நிலையில் மாதவிக்கு எதிரான புகாரை விசாரிக்க பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்காக, அக்குழுவின் தலைவராக இருக்கும் கே.சி. வேணுகோபால், அவருக்கு சம்மன் அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழுவின் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து