முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

சனிக்கிழமை, 2 நவம்பர் 2024      ஆன்மிகம்
Tiruchendur 2024-11-02

தூத்துக்குடி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று காலை தொடங்கியது. கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தல்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து சஷ்டி விரதத்தை தொடங்கினர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது கந்தசஷ்டி விழாவாகும். சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்த புராணச் சிறப்பு வாய்ந்த தலம் என்பதால் திருச்செந்தூரில் நடைபெறும் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நேற்று (2-ம் தேதி) தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானை அம்மனுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மன் பிரதான கும்பங்கள் மற்றும் சிவன், பார்வதி, பரிவார தெய்வ கும்பங்கள் என பல்வேறு கும்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. யாகசாலையில், விக்னேசுவர பூஜை, புண்ணியாக வாஜனம், பூத சுத்தி, கும்ப பூஜை, ஹோம பூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

யாகசாலையில் பூர்ணாகுதி தீபாராதனை, அதனை தொடர்ந்து சுவாமி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு உச்சிகால தீபாராதனை ஆனதும் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானைக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் மேளவாத்தியங்களுடன், சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.

பின்னர் மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் திருவாடுதுறை ஆதின கந்த சஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருகிறார். அங்கு சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அலங்காரத்துடன் சுவாமி தங்க தேரில் எழுந்தருளி கிரி பிரகாரம் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

கந்தசஷ்டி திருவிழா தொடக்கத்தை முன்னிட்டு அதிகாலை முதலே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி பச்சை நிற ஆடை அணிந்து கோயில் கிரி பிரகாரத்தில் அங்க பிரதட்சணம் செய்து விரதத்தை தொடங்கினர். கோயில் வளாகத்தில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகைகளில் பக்தர்கள் குழுக்களாக அமர்ந்து சுவாமியின் பஜனை பாடல்கள் பாடி விரதமிருந்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து