முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இரண்டு நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை: கடந்த ஆண்டை விட ரூ.29 கோடி குறைவு

சனிக்கிழமை, 2 நவம்பர் 2024      தமிழகம்
Tasmac-Shop 2023 04 25

சென்னை, தீபாவளியையொட்டி, தமிழகத்தில் இரண்டு நாள்களில் ரூ.438.53 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.29 கோடி விற்பனை குறைந்துள்ளது.

கடந்த புதன்கிழமை ரூ.202.59 கோடிக்கும், தீபாவளி பண்டிகையான வியாழக்கிழமை ரூ.235.94 கோடிக்கும் மதுபானம் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனம், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை என 5 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. அதில் அதிகபட்சமாக புதன்கிழமை சென்னை மண்டலத்தில் ரூ.47.16 கோடிக்கும், தீபாவளி பண்டிகை நாளான வியாழக்கிழமை ரூ.54.18 கோடிக்கும் மதுபானம் விற்பனையாகியுள்ளது.

குறைந்த அளவாக கோவை மண்டலத்தில் புதன்கிழமை ரூ.36.40 கோடிக்கும், வியாழக்கிழமை ரூ.42.34 கோடிக்கும் கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் புதன்கிழமை ரூ.40.88 கோடிக்கும், தீபாவளி பண்டிகை நாளான வியாழக்கிழமை ரூ.47.73 கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி மண்டலத்தில் புதன்கிழமை ரூ.39.81 கோடிக்கும், தீபாவளி பண்டிகை நாளான வியாழக்கிழமை ரூ.46.51 கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்.24-ஆம் தேதி (திங்கள்கிழமை) தீபாவளியன்று ஒரே நாளில் மட்டும் ரூ.256 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை மற்றும் பண்டிகைக்கு முந்தைய நாள் சேர்த்து ரூ.467.63 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இந்த ஆண்டு ரூ.29.10 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுபானங்கள் விற்பனை குறைந்ததற்கு மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வந்ததே காரணம் என கூறுகின்றனர். ஆனால், 1,500 அரசு மதுபான கடைகள் குறைந்தாலும், தனியார் மனமகிழ் மன்றங்கள், உணவக விடுதிகளுடன் கூடிய பார்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதே அரசு மதுபான கடைகளில் மதுபான விற்பனை குறைந்ததற்கு காரணம் என டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து