முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு மேம்படுத்தப்பட்ட இணையதளம், மொபைல் செயலி தொடக்கம்

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      தமிழகம்
Bus 2023-05-24

Source: provided

சென்னை : அரசு பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவிற்காக மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக பொதுப்போக்குவரத்து சேவையை நவீனமயமாக்கும் முக்கிய முயற்சியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் கைபேசி செயலியை, ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவு திட்டத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று (23 செப்டம்பர் 2024) துவக்கி வைத்தார். இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம், அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி (TNSTC) பேருந்துகளுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் செயலி, தினசரி 2,600 பேருந்துகளில் 1.24 லட்சம் இருக்கைகளை எளிதாகவும், விரைவாகவும் முன்பதிவு செய்யும் வகையில் பயணிகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வசதிகளை கொண்டுள்ளது. இது பயணர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் பல புதிய அம்சங்களை கொண்டுள்ளது மற்றும் முன்பதிவு செயல்முறையை சீராகக் குறைக்கிறது.

இந்த மேம்படுத்தப்பட்ட முறைகள், தமிழக பொதுப் போக்குவரத்து சேவையில் ஒரு முக்கிய முன்னேற்றத்தை குறிக்கின்றன. மேலும், பயணிகள் மேம்படுத்தப்பட்ட www.tnstc.in என்ற இணையதளத்திலும் அல்லது டி.என்.எஸ்.டி.சி கைபேசி செயலியினை முக்கிய தளங்களில் பதிவிறக்கவும் செய்து பயணச்சீட்டை முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

மேலும், மாநகர் போக்குவரத்து கழகத்தைச் சார்ந்த 3 ஓட்டுநர்கள் மற்றும் 11 நடத்துநர்கள் என மொத்தம் 14 இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 3 இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் ஓட்டுநர் உடன் நடத்துநருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து