முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்ட்டில் ஆட்சிக்கு வந்த உடன் ஊடுருவல்காரர்களை கண்டறிய குழு : உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2024      இந்தியா
Amit-Shah 2

Source: provided

ராஞ்சி : ஜார்க்கண்ட்டில் ஆட்சிக்கு வந்த உடன் ஊடுருவல்காரர்களை கண்டறிய குழு அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் நாளை (13ம் தேதி) 2ம் கட்ட தேர்தல் வரும் 20ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 23ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, ஜார்க்கண்ட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அம்மாநிலத்தின் சிராய்கிலா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சர்யுமான அமித்ஷா பங்கேற்றார். பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், ஜார்க்கண்ட்டில் பழங்குடியின மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஊடுருவல்காரர்கள் நமது மகள்களை திருமணம் செய்து நிலங்களை பறித்துக்கொள்கின்றனர்.

பழங்குடியின பெண்களை திருமணம் செய்தாலும் ஊடுருவல்காரர்களுக்கு நில உரிமை மாற்றப்படுவதை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும். ஜார்க்கண்ட்டில் ஆட்சிக்கு வந்த உடன் ஊடுருவல்காரர்களை கண்டறிய குழு அமைக்கப்படும். ஊடுருவல்காரர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் பறித்துக்கொண்ட நிலங்கள் மீட்கப்படும்' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து