முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டி-20 போட்டி: இங்கிலாந்து அணி வெற்றி

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2024      விளையாட்டு
England 2024-11-11

Source: provided

பார்படாஸ் : மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

159 ரன்கள் இலக்கு...

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி பார்படாஸில் நடைபெற்றது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியது இங்கிலாந்து. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பௌவல் 41 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரோமாரியோ ஷெப்பர்டு 22 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 14 ரன்களும் எடுத்தனர்.

2-வது வெற்றி...

இங்கிலாந்து தரப்பில் சாக்யூப் மஹ்முத், மௌஸ்லி மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அடில் ரஷித் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 14.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தித் தீவுகளை வீழ்த்தியது. 

முன்னிலை...

இங்கிலாந்து அணியில் முதல் போட்டியில் சதம் விளாசிய பில் சால்ட் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 45 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, வில் ஜாக்ஸ் 38 ரன்களும், லியம் லிவிங்ஸ்டன் 23 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரோமாரியோ ஷெப்பர்டு 2 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து