முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : சென்னை ஐகோர்ட்டில் புதிதாக நியமிக்கப்பட்ட 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 கூடுதல் நீதிபதிகள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.பூர்ணிமா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் மற்றும் சென்னை தொழிலாளர் தீர்ப்பாய நீதிபதி அகஸ்டின் தேவதாஸ் மரியா கிளிடா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நீதிபதி ஆர்.பூர்ணிமா, கடந்த 2011-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் சென்னை ஐகோர்ட்டு விஜிலென்ஸ் பதிவாளராக பணியாற்றி தற்போது, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்தார். நீதிபதி எம்.ஜோதிராமன், திருத்தணியைச் சேர்ந்தவர். இவரும் 2011-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றி, ஐகோர்ட்டு மதுரை கிளையில் பதிவாளராக பணியாற்றினார். அதேபோல, நீதிபதி ஏ.டி.மரியா கிளிடா, 1995-ம் ஆண்டு சிவில் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பதவி உயர்வு பெற்று பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து