முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் : ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தகவல்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      தமிழகம்
Muthuswamy 2024-03-24

Source: provided

ஈரோடு :  தமிழகத்தில் மூடப்படவுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் மூடப்படும் கடைகள் பட்டியல் வெளியிடப்படும் என  அமைச்சர்  முத்துசாமி தெரிவித்தார். 

ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் பெரும்பள்ளம் ஓடையில் ஆகாயத் தாமரையை அகற்றும் பணியை தொடங்கி வைத்த பின்,  அமைச்சர்  முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்பதில், எங்களுக்கு கொள்கை ரீதியாக மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், ஒரே நாளில் மதுக்கடைகளை மூடினால், மிகப் பெரிய பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும். எனவே படிப்படியாக மதுக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓர் இடத்தில், மதுக்கடையை மூடினால், அங்கு தவறு நடக்குமா என்று பார்க்க வேண்டியுள்ளது. மதுக்கடையை மூடினால் அங்கு வசிப்பவர்கள் குடிப்பதை நிறுத்தி விடுகின்றனர் என்று சொல்லி விட முடியாது. 

மதுக்கடைகளை மூடும் போது, அவர்களை அந்த பழக்கத்தில் இருந்து வெளியேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். டாஸ்மாக் மதுக்கடைகள் குறித்து கணக்கெடுத்தால், அது, விற்பனையை அதிகரிப்பதற்காக என்று தவறாக நினைக்கின்றனர்.

டாஸ்மாக் கடைகளில் தவறு ஏதேனும் நடக்கிறதா என்பதை கண்டறியவும் கணக்கெடுப்புகள், ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். அகில இந்திய அளவில் மதுக்கடைகளின் மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், மாநில அரசு ஒத்துழைக்கும். 

தமிழகத்தில் மூடுப்படும் மதுக்கடைகள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில், மூடப்படும் கடைகளின் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து