முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு பார்லி. தொகுதிக்கு நவ. 13-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2024      இந்தியா
Election-Commision 2023-04-20

புது டெல்லி, பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சட்டப்படி, ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடர முடியும் என்பதால் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். 

இதன் மூலம் ராகுல்காந்தி ரேபரேலி எம்.பியாக ராகுல் காந்தி தொடர்கிறார். வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்த நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.

இதனையடுத்து வயநாட்டில் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவில் சிக்கி எண்ணற்றோர் உயிரிழந்தனர். இதனால் வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மகராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலுடன் சேர்த்து வயநாடு இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 13-ம் தேதி வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.  

 இந்தத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. வரும் 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் வரும் 28-ம் தேதி பரிசீலிக்கப்படும். 

வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் வரும் 30-ம் தேதியாகும். நவம்பர் 13-ம் தேதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து