முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தொண்டை அடைப்பான் நோய்க்கு இயற்கை மருத்துவம்

  1. டான்சில் எனப்படும் தொண்டை அடைப்பான் நோய்யை இயற்கை மருத்துவ முறையில் எப்படி குணப்படுத்த முடியும் என்பதை காணலாம். 
  2. தொண்டை வலியும்,மூக்கில் இருந்து நீர் வருவதும்,பசியின்மையும் மற்றும் உடல் எடை கூடுவதும் தொண்டை அடைப்பான் நோயின் அறிகுறிகள் ஆகும்.
  3. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த நோய் அதிகமாக வருகிறது,குளிச்சியான இடங்களுக்கு செல்வதாலும் குளிச்சியான பொருட்களை சாப்பிடுவதாலும் இந்த நோய் வருகிறது.
  4. மேலும் அதிக சூடான பொருட்களை சாப்பிடுவதாலும் இந்த நோய் வரும்.
  5. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த நோய் வந்தால் உடல் அசதியும்,உடல் வலியும்,காது மற்றும் மூக்கில் நீர் வருதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
  6. இதற்கு நீரை லேசாக சூடுபடுத்தி சிறிதளவு உப்பு போட்டு கலந்து வாய் கொப்பளிப்பதை போல் கவனமாக  முயற்சி செய்து தொண்டை வரை உப்பு நீரை வைத்து கொப்பளிக்க வேண்டும்.
  7. ஒரு நாளைக்கு மூன்று முறை விதம் தொடந்து 7 நாட்களுக்கு இதை செய்து வர தொண்டை அடைப்பான் நோய் குணமாகும்.
  8. தொண்டையில் உள்ள கிருமிகளை உப்பு நீர் அகற்றி விடுவதால் வலி குறைகிறது.
  9. குழந்தைகளுக்கு இரண்டு மிளகை பொடியாக்கி உடன் 10 சொட்டு தேனை ஊற்றி நன்றாக கலந்து குழந்தைகள் நாக்கில் தடவி விட்டு அதை சுவைக்க வைத்து அருந்த சிறிதளவு நீரை கொடுத்தல் தொண்டை அடைப்பான் நோய் குணமாகும்.
  10. மிளகு மருத்துவத்தை 18 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்கள் 5 மிளகை பயன் படுத்தலாம்.
  11. இந்த  நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சரி செய்யவில்லை எனில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
  12. இந்த அறுவை சிகிச்சையை பலமுறை செய்தால் குரல் வளம் பாதிக்க வாய்ப்புள்ளது.
  13. தொண்டை அடைப்பான் நோய் வராமல் தடுக்க மிகவும்  சூடான மற்றும் குளிச்சியான பொருட்களை தவிர்க்க வேண்டும்.
  14. பழச்சாறுகளையும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது ஐஸ்கிரீம் வகைகளை தவிர்க்க வேண்டும்.
  15. புளிப்பு சுவை அதிகம் உள்ள ஆரஞ்சு பழம் மற்றும் நெல்லிலிக்காயை
  16. தவிர்க்க வேண்டும்.
  17. தொண்டை அடைப்பான் நோய் வந்த பின் குளிச்சியான பொருள்களை தவிர்க்க விட்டால் காது,மூக்கு,தொண்டை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும்.
  18. தொண்டை அடைப்பான் நோய் வந்த பின் காதில் பட்ஸ் வைத்து குடைவது சுகமாக இருந்தாலும் அதை தவிர்ப்பது நல்லது.
  19. மேலும் அது தொண்டை அடைப்பான் நோய் காரணமாக வருகிறது என்பதை உணர்ந்து உப்பு நீரால் தொண்டை கொப்பளித்தல் மற்றும் மிளகு தேன் கலந்த கலவையை சாப்பிட்டு தொண்டை அடைப்பான் நோயை சரி செய்தால் காது,மூக்கு,தொண்டை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பு தானாக குணமாகும்.
  20. பெரியவர்கள் மிளகு தேன் மற்றும் சிறிதளவு சுக்கு பொடி சேர்த்து சாப்பிடும் போது காய்ச்சல் வருவதை தடுக்க முடியும்.
  21. தொண்டை அடைப்பான் நோய் முற்றி அறுவை சிகிச்சை செய்யும் நிலையிலும் இந்த இயற்கை மருத்துவ முறையை 3 மாதம் தொடாந்து செய்து வந்தால் அறுவை சிகிச்சை செய்யும் தேவை இருக்காது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago