முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகத்தரம் வாய்ந்த வீரர்: விராட் கோலிக்கு இந்திய அணி பயிற்சியாளர் காம்பீர் புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2024      விளையாட்டு
Gambhir 2023 09 14

Source: provided

பெங்களூரு : உலகத்தரம் வாய்ந்த வீரர் விராட் கோலிக்கு இந்திய அணி பயிற்சியாளர் காம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.

சுற்றுப்பயணம்...

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பெங்களூரு, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும், நியூசிலாந்து அணி டாம் லதாம் தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலியின் பார்ம்... 

இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் விராட் கோலியின் பார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து கம்பீர் கூறியதாவது, விராட் கோலி உலகத் தரம் வாய்ந்த வீரர் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அவர் நீண்டகாலமாக சிறப்பாக விளையாடி வருகிறார். 2008-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன போது என்னுடன் இணைந்து தொடக்க வீரராக இறங்கியது நினைவில் இருக்கிறது. அப்போதில் இருந்து இப்போது வரைக்கும் சாதிக்கும் வேட்கையுடன் காணப்படுகிறார்.

உலகத்தரம் வாய்ந்த... 

இந்த வேட்கை தான் அவரை உலகத்தரம் வாய்ந்த வீரராக உருவாக்கி இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிறைய ரன் குவித்து, அந்த உத்வேகத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் ஆவலில் அவர் இருப்பார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார். ஒவ்வொரு ஆட்டத்தையும் வைத்து வீரரின் திறமையை மதிப்பிடக்கூடாது. அது நியாயமானதாக இருக்காது. இது ஒரு விளையாட்டு. ஏற்றத் தாழ்வு இருக்கத் தான் செய்யும். நாங்கள் தொடர்ச்சியாக 8 டெஸ்டில் விளையாட உள்ளோம். கோலி மட்டுமல்ல, ஒவ்வொருவரும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புடன் இருப்பார்கள். 

விரும்புகிறேன்... 

ஒரே நாளில் 400 அடிக்கவும் தெரிய வேண்டும். 2 நாட்கள் ஆடி டிரா செய்ய வேண்டுமா, அதைச்செய்யவும் தெரிய வேண்டும். அந்த டைப் அணியாக நாம் மாற விரும்புகிறேன். நீங்கள் அதை வளர்ச்சி என்று கூறுங்கள். சூழ்நிலைக்கேற்ப தகவமைத்தல் என்று சொல்லுங்கள், அல்லது டெஸ்ட் கிரிக்கெட் என்று சொல்லுங்கள் ஒரே மாதிரி ஆடிக் கொண்டிருந்தால் முன்னேற்றம் இருக்காது. நான் உலக கிரிக்கெட்டைப் பற்றி பேச முடியாது. ஏனெனில் ஒவ்வொரு அணிக்கான டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டக் கொள்கைகள் மாறுபடும். நான் என் அணியைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.

டிரா செய்ய வேண்டுமா.... 

2 நாட்கள் போராடி டெஸ்ட்டை டிரா செய்ய வேண்டுமா அதற்கும் நம்மிடம் வீரர்கள் இருக்கிறார்கள். நமது முதல் நோக்கம் வெற்றியே. அப்படியே சூழ்நிலை மாறி போராடி டிரா செய்ய வேண்டுமா அதற்கும் தயாராக இருப்பதும் எங்கள் நோக்கம். இப்படி சவாலான டெஸ்ட் கிரிக்கெட் தான் எங்களுக்குத் தேவை. வீரர்கள் களத்தில் இறங்கி ஆக்ரோஷமாக தங்கள் இயல்பான ஆட்டத்தை ஆட விரும்புகிறோம். ஒரே நாளில் 400-500 ரன்கள் குவிக்க முடியும் என்றால் ஏன் அதைத் தடுக்க வேண்டும்? அதிக ரிஸ்க் எடுப்பது அதிகப் பலன்களைத் தரும்.

எதிர்மறையாக போகும்...

சில வேளைகளில் அதிக ரிஸ்க் எதிர்மறையாகப் போகும். ஆனால் கவலையில்லை. சில வேளைகளில் இந்த ஆட்ட முறையில் 100 ரன்களுக்குக் கூட ஆட்டம் இழக்கலாம். ஆனால் கவலையில்லை. அதற்காக வீரர்களை மாற்றப்போவதில்லை. இப்படித்தான் நாட்டு மக்களுக்கு கேளிக்கை அளிக்க விரும்புகிறோம். இப்போது எங்கள் கவனம் நியூசிலாந்துக்கு எதிரான தொடர், பிறகு ஆஸ்திரேலியா, பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல். நியூசிலாந்து ஒரு வித்தியாசமான சவால். அங்கு நமக்கு சவாலான வீரர்கள் உள்ளனர். ஆனால் அணுகுமுறையில் மாற்றமில்லை” என்றார் கம்பீர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து