முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஆய்வு செய்தும் மெத்தனத்தில் சுகாதாரத்துறை: போர்க்கால அடிப்படையில் மருத்துவ முகாம்களை அமைத்திட வேண்டும் : மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2024      தமிழகம்
Saravanan 2024-05-10

Source: provided

மதுரை : முதல்வர் ஆய்வு செய்தும் மெத்தனத்தில் சுகாதாரத்துறை உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன், போர்க்கால அடிப்படையில் மருத்துவ முகாம்களை அமைத்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க.மாநில மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது-

மதுரையில் சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது 100-க்கும் மேற்பட்ட நீர்வரத்து கண்மாய் மூலம் மூலம் செல்லூர் கண்மாயில் நீர் வரத்து வந்து, அதன் மூலம் பந்தல்குடி கால்வாய் மூலம் வைகையாற்றில் மழை நீர் கலக்கும்.ஆனால் பந்தல்குடி கால்வாய் பகுதியில் மராமத்து பணி உள்ளிட்ட எந்த பணிகளையும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஸ்டாலின் அரசு செய்ய தவறியதால், மழை நீர் குடியிருப்பு பகுதியில் சென்றடைந்தது மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.

குறிப்பாக குடிநீர் குழாய்கள் சில இடங்களில் உடைந்து போய் அதில் சாக்கடை நீர் கலந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சில நாட்களாக சாக்கடை கலந்த நீரை மக்கள் பயன்படுத்துவதால் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வருகிறது. தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மயக்கம் வரும்.அதனை தொடர்ந்து சிறுநீரக பாதிப்பு கூட ஏற்படும். இந்த வயிற்றுப்போக்கால் மருத்துவமனைகளில் அதிக அளவில் மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். 

ஏற்கனவே பொதுச்செயலளார் எடப்பாடியார் மழைக்காலங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் என்று கூறினார்.தொடர்ந்து மழை நீரால் மதுரை மிக பாதிக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். எடப்பாடியார் குரல் கொடுத்த பின்பு தான், மதுரையில் முதலமைச்சர் ஆய்வுக்கூட்டத்தை நடத்தி, அதில் செல்லூர் கண்மாயில் இருந்து மழை நீரை வெளியேற்ற 11.9 கோடி அளவில் திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக செய்தி வருகிறது.ஏற்கனவே சென்னையில் 4000 கோடி அளவில் இந்த மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது

ஆனால் இரண்டு நாள் மழைக்கே சென்னை தத்தளித்து இதற்கு கூட எடப்பாடியார் வெள்ளை அறிக்கை கேட்டார்.   முதலமைச்சர் ஆய்வு செய்த பின்பு கூட சம்பந்தப்பட்ட பகுதியில் சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தி இருந்தால், மக்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது.அதேபோல் பாதிக்கப்பட்ட பகுதிகளை மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற பாதிப்பு  ஏற்பட்டிருக்காது.

மேலும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரசு மேற்கொள்ளவில்லை.முதலமைச்சர் ஆய்வு கூட்டம்  கண்துடைப்பாக இல்லாமல், மக்களுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக இருக்க வேண்டும். மேலும் போர்க்கால அடிப்படையில் மருத்துவ முகாம்களை நடத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து