முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல், வாழை பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2024      தமிழகம்
madurai 2024-12-23

Source: provided

மதுரை: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே நெல், வாழை பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் டங்ஸ்டன் திட்டத்திற்கு சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவ னத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் இயற்கை சூழலியல் பாதிக்கப்படுவதோடு விவசாயம் அழிந்து கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என கிராம மக்கள் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த திட்டத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் டங்ஸ்டன் திட்டத்திற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார். ஆனால் டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு தற்போது வரை மவுனம் காத்து வருகிறது. இதனால் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அதன்படி நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி, வல்லா ளப்பட்டி, கிடாரிப்பட்டி, வெள்ளரிப்பட்டி, தெற்கு தெரு, கல்லம்பட்டி, சூரக்குண்டு, எட்டிமங்களம், புளிப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கரும்பு, வாழை, நெல், ஏர்கலப்பை ஆகியவற்றை ஏந்தி டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து