முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரியில் புதிய கண்ணாடி பாலம் திறப்பு பணி தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      தமிழகம்
Kumai-1 2024-05-06

Source: provided

கன்னியாகுமரி : திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பாலம் தற்போது திறப்புக்கு தயாராகியுள்ளது.

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறை ஒன்றில், உலகுக்கு பொதுமறையான திருக்குறளை தந்த திருவள்ளுவருக்கு பிரமாண்டமாக 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 1-1-2000 அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

இந்த சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி இன்று (திங்கட்கிழமை)முதல் 3 நாட்கள் தமிழக அரசு சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதற்காக குமரி மாவட்ட நிர்வாகம் கன்னியாகுமரி சுற்றுலாத்தலத்திலும், கடலின் நடுவே திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைப் பகுதியிலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பாலம் தற்போது திறப்புக்கு தயாராகியுள்ளது.

திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

கன்னியாகுமரிக்கு வந்ததும் மாலை 6 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிடுகிறார். பின்னர் திருவள்ளுவர் சிலைக்கும், கடலின் நடுவே மற்றொரு பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே ரூ.37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபாலத்தையும் திறந்து வைக்கிறார். முதல்வரின் வருகையையொட்டி, கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து