முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரத்குமாரின் ஸ்மைல் மேன் விமர்சனம்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      சினிமா
Smile-Man-Review 2024-12-30

Source: provided

சிபிசிஐடி அதிகாரியான சரத்குமார், ஸ்மைல் மேன் என்ற சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது விபத்தில் சிக்கி உடல் நிலை பாதிக்கப்படுகிறார்.

சில மாதங்களுக்குப் பிறகு குணமடைந்தாலும் அல்சைமர் என்ற மறதி நோயால் பாதிக்கப்படுகிறார்.  அதே சமயம், சைக்கோ கொலையாளிக்கும் தனக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கும் சரத்குமார், அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள மீண்டும் அந்த கொலையாளியை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். 

அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா?, சைக்கோ கொலையாளிக்கும் சரத்குமாருக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதே ‘ஸ்மைல் மேன்’ படத்தின் கதை. படத்தில் தன்னால் முடிக்க முடியாமல் போன வழக்கை முடிக்க போராடும் ஒரு அதிகாரியாக நடித்து படத்திற்கு பெரும் தூணாக பயணித்திருக்கிறார்.

சிஜா ரோஸ், ஸ்ரீகுமார் இனியா, சுரேஷ் மேனன், நட்ராஜன், ராஜ்குமார், மலைராஜன் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக அமைந்திருக்கிறார்கள்.. ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன், இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஸ், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் ஆகியோரது பணி படத்தின் தரத்தை உயரத்தியிருக்கிறது. மொத்தத்தில், ‘ஸ்மைல் மேன்’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து