முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்கு திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      சினிமா
Alangu-Review 2024-12-30

Source: provided

பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த நாயகன் குணாநிதி, காளி என்ற நாயை வளர்க்கிறார். வேலைக்காக தனது உறவினர்களுடன் கேரளா செல்லும் வழியில் வரும் ஒரு பிரச்சனையால் நாய்க்கு ஆபத்து ஏற்படுகிறது.

அதில் ஒருவரது கையை குணாநிதி வெட்டிவிடுகிறார். கையை இழந்தவர் குணாநிதி மற்றும் அவரது கூட்டத்தை கொலை செய்ய துடிக்க, அவர்களிடம் இருந்து தப்பிக்க காட்டு வழியாக பயணம் மேற்கொள்கிறார்கள். அந்த பயணம் அவர்களை தப்பிக்க வைத்ததா? அல்லது வேறு ஆபத்தில் சிக்க வைத்ததா? என்பதே அலங்கு படக்கதை. படத்தில் குணாநிதி அழகான அதிரடியான  நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மலையன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட் வழக்கம் போல் கலக்கியிருக்கிறார். நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீரேகா, வித்தியாசமான தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். ஒளிப்பதிவாளர் பாண்டிக்குமார்,  இசையமைப்பாளர் அஜீஷ், சான் லோகேஷின் படத்தொகுப்பு ஆகியவை படத்தை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.பி.சக்திவேல், காளி என்ற நாயையும், அதன் செயல்பாடுகளையும் மிக தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார். ஆக்‌ஷன் படம் என்றாலும், நாய் மட்டும் இன்றி யானை, நரிக்கூட்டம் என்று வன விலங்குகளையும் காட்சிகளில் பயன்படுத்தி சிறுவர்களையும் கவர முயற்சித்திருக்கும் இயக்குநர் சக்திவேலின் உழைப்பு திரையில் தெரிகிறது. மொத்தத்தில், ‘அலங்கு’ அட்டகாசம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து