முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டிற்கே தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தான் வழிகாட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      தமிழகம்
stalin 2024-12-30

Source: provided

தூத்துக்குடி: நாட்டிற்கே தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தான் வழிகாட்டி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவிகளுக்கான ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இதன்பின் புதுமைப்பெண் திட்டத்தில் புதிதாக இணைந்து புதிதாக சாதனை படைக்க உள்ள மகள்களே என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசத்தொடங்கினார். மேலும் அவர் கூறியதாவது:- ஆயிரக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் கூடியிருப்பதை காணும்போது பெருமையாக உள்ளது. நாட்டிலேயே தமிழக பெண்கள் தான் அனைத்து நிலைகளிலும் முதலிடத்தில் உள்ளனர். நாட்டில் உயர்கல்வி கற்கும் பெண்கள் எண்ணிக்கையில் தமிழகம் தான் டாப். தமிழக பெண்கள் இந்தியாவிலேயே மதிப்பெண் உள்பட அனைத்திலும் டாப்-ஆக உள்ளீர்கள்.

உயர்கல்வி பயில்வது, வேலைக்கு செல்வது அனைத்திலும் தமிழக பெண்கள் டாப்-ல் இருப்பதே பெரியாரின் கனவு. கல்வியை பொறுத்தவரை பெண்கள் தான் முன்னிலையில் உள்ளனர்.  100 ஆண்டுகளுக்கு முன்னர் சமூக ரீதியாக, பாலின ரீதியாக கல்விக்கு தடை இருந்தது. கல்வி கனவை அனைவருக்கும் திறந்து விட்ட ஆட்சி நீதிக்கட்சி ஆட்சி.

இந்தியாவிலேயே அனைவருக்கும் கல்வி என சட்டம் இயற்றியது நீதிக்கட்சி.100 பெண்களில் இருவர் மட்டுமே கல்வி பயின்று இருந்த நிலை இன்று மாறியுள்ளது.வந்த பாதையை மறக்காமல் இருந்தால் தான் வழித்தவறி போகாமலிருக்க முடியும். புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைப்பதில் திராவிடியன் ஸ்டாக் ஆக நான் பெருமைப்படுகிறேன். பெருந்தலைவர் காமராஜர் பெயர்கொண்ட கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதை பெருமைக்குரியதாக கருதுகிறேன்.  காமராஜர் ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் ஏராளமான பள்ளிகள் திறக்கப்பட்டது.  நாட்டிற்கே தமிழக அரசின் திட்டங்கள் தான் வழிகாட்டியாக உள்ளன என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து