முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் டிராபிக் ஜாம்: பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஏவும் நேரத்தை தள்ளிவைத்தது இஸ்ரோ

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      இந்தியா
Isro 2024-12-30

Source: provided

ஆந்திர பிரதேசம்: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நேற்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முன்தினம் இரவு 8.58 மணிக்கு தொடங்கியது. 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முன்தினம் இரவு 8.58 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் விண்வெளியில் டிராபிக் ஜாம் ஆகியுள்ளதால் ராக்கெட் 2 நிமிடம் தாமதாக 10.00 மணிக்கு ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஒரே சுற்றுப்பாதையில் உள்ள மற்ற செயற்கைக்கோள்களுடன் சிக்கும் என்பதால் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ் சோமநாத் தெரிவித்தார். ராக்கெட்டின் சுற்றுப்பாதை மற்றும் பறக்கும் பாதையில் உள்ள நெரிசல் காரணமாக இஸ்ரோ இதற்கு முன்னரும் ஏவுதலை தள்ளி வைத்திருக்கிறது என்பதால் இது சகஜமான ஒன்றே என்று கூறப்படுகிறது.

தற்போது ஏவப்படும் ராக்கெட் , ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்று வட்டப்பாதைகளில் 2 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படுகின்றன. இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டத்தின் பழவேற்காடு பகுதி மீனவர்கள், ராக்கெட் ஏவுதலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுக்கு செல்லாமல் தவிர்க்க வேண்டும் தமிழக மீன்வள எச்சரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து