முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் அரசுத்தேர்வை மீண்டும் நடத்த மாணவர்கள் போராட்டம் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      இந்தியா
bihar 2024-12-30

Source: provided

பீகார்: பீகாரில்  அரசுத்தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் தடியடி நடத்தி கூட்டத்தை போலீசார் கலைத்தனர். மேலும், மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பிரசாந்த் கிஷோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

குரூப் ஏ மற்றும் பி பதவிகளில் ஆட்களை சேர்ப்பதற்கான பிபிஎஸ்சியின் ஒருங்கிணைந்த முதன்மை போட்டித் தேர்வு கடந்த டிசம்பர் 13 நடைபெற்றது. மாநிலத்தில் 945 மையங்களில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர். பல தேர்வு மையங்களில் வினாத்தாள் கசிவு, வினாத்தாள் கொடுப்பதில் தாமதம் குறித்து குற்றம்சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாட்னாவில் உள்ள தேர்வு மையத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது மாவட்ட மாஜிதிரெட் மாணவர் ஒருவரை சரமாரிய தாக்கிய வீடியோ வைரலாகியது. தேர்வர்கள் வினாத்தாள்களை கிழித்து, தேர்வு அறையில் இருந்து அமளியில் ஈடுபட்ட வீடியோவும் வெளியாகியது.

இந்நிலையில் முதன்மை தேர்வுகளை மீண்டும் நடத்தக்கோரி திரளான மாணவர்கள் தலைநகர் பாட்னாவில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் வியூக வகுப்பாளார் பிரசாத் கிஷோர் நடத்தும் ஜன் சுராஜ் கட்சியினருக்கும், போட்டித் தேர்வு பயிற்சி மையாதோரும் மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்க போலீசார் தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களை கலைக்க முயன்றனர்.

முதல்வர் நிதிஷ் குமாரின் இல்லத்திற்குச் செல்வதற்காக மாணவர்கள் காந்தி மைதானத்தில் திரண்டு ஜே.பி. கோலம்பர் நோக்கி நோக்கி பேரணி நடத்தினர் பிரசாந்த் கிஷோர் மாணவர்களுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்திருந்தார். ஜே.பி.கோலம்பரில் நடந்த அணிவகுப்பில் அவர் கலந்துகொண்டார். இதனால் பிரசாந்த் கிஷோர், அவரது ஜன் சூராஜ் கட்சியின் தலைவர்கள், சில பயிற்சி மைய உரிமையாளர்கள் மற்றும் 700 போராட்டக்காரர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் மக்களைக் கூட்டி, அவர்களைத் தூண்டிவிட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து