முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலை. மாணவி விவகாரம்: த.வெ.க. பொதுச்செயலாளர் கைது

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      தமிழகம்
Bussy-Anand 2023-11-03

Source: provided

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் சென்னை தி.நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கோட்டூரைச் சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் தனது கைப்பட கடிதம் எழுதி வெளியிட்டார். விஜய் எழுதிய கடிதத்தை பொதுமக்களுக்கு விநியோகித்த த.வெ.க. தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்தனர். தொண்டர்களை பார்க்கச் சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்தையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அண்ணா பல்கலை. விவகாரத்தில் விஜய் எழுதிய கடித்தத்தை அனுமதியின்றி வழங்கியதாக புகார் எழுந்த நிலையில், ஆனந்த் சென்னையில் தி.நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, விஜய் தனது கைப்பட எழுதிய கடித்தை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து