முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கின்னஸ் சாதனை நடன நிகழ்ச்சி: மேடையில் இருந்து தவறி விழுந்த காங். பெண் எம்.எல்.ஏ. படுகாயம்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      இந்தியா
Cong 2024-12-30

Source: provided

திருவனந்தபுரம் : கின்னஸ் சாதனை நடன நிகழ்ச்சியில் மேடையில் இருந்து தவறி விழுந்த காங். பெண் எம்.எல்.ஏ. படுகாயம் அடைந்தார்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடிகையும் நடன கலைஞருமான திவ்யா உன்னி தலைமையில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது. கின்னஸ் சாதனைக்காக 12 ஆயிரத்து 600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை காண ஏராளமானோர் மைதானத்தில் திரண்டனர்.

கேரள அமைச்சர் சஜி செரியன், திருக்காக்கரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமா தாமஸ் மற்றும் சிலர் வி.ஐ.பி. காலரியில் இருந்து நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக உமா தாமஸ் எம்.எல்.ஏ., மேடையில் இருந்து தவறி விழுந்தார். சுமார் 18 அடி உயரத்தில் இருந்து அவர் விழுந்ததில் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பாலரிவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.அவரை வென்டிலேட்டரில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கோட்டயம் மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான டாக்டர்கள் குழு விரைந்து வந்து சிகிச்சை முறையை கேட்டறிந்தது. சுமார் 2 மணி நேரம் அவர்கள், உமா தாமஸ் எம்.எல்.ஏ. உடல்நிலையை ஆய்வு செய்தனர். அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு, நுரையீரலில் ரத்தம் உறைதல், எலும்புகள் முறிவு உள்ளிட்ட பலத்த காயங்கள் இருப்பதாகவும், அதற்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து