முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் நடந்த சம்பவம்: பிறந்து குழந்தையை விற்று புது பைக் வாங்கிய தந்தை

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      இந்தியா
Odisha 2024-12-30

Source: provided

ஒடிசா : ஒடிசாவில் பிறந்து குழந்தையை விற்று புது பைக் வாங்கிய தந்தையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பாஸ்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹத்மாத் கிராமதத்தை சேர்ந்தவர் தர்மு பெஹெரா. இவரது இரண்டாவது மனைவி சாந்தி பெஹரா. பிரசவத்திற்காக டிசம்பர் 19 அன்று பரிபாடாவில் உள்ள பிஆர்எம் மருத்துவக் கல்லூரியில் சாந்தியை சேர்த்தார், அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர் டிசம்பர் 22 முதல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் பிறந்த 10 நாளே ஆன தனது மகனை தர்மு, மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உடாலா சப்-டிவிஷனுக்கு உட்பட்ட சைன்குலாவைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிக்கு இரண்டு இடைத்தரகர்கள் மூலம் விற்று, அந்த பணத்தை வைத்து இஎம்ஐயில் பைக் வாங்கியுள்ளார்.

புது பைக்குடன் தர்மு சுற்றித்திரிவதைப் பார்த்த கிராம மக்கள் சந்தேகமடைந்து குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தர்மு மற்றும் சாந்தி மற்றும் குழந்தையை வாங்கிய தம்பதியினரை விசாரணைக்கு அழைத்தது. உரிய நீதிமன்ற ஆவணத்தின் மூலம் சட்டப்படிதான் குழந்தையை தானம் செய்ததாக தம்பதியினர் கூறினர். இருப்பினும் பைக் வாங்க குழந்தையை விற்ற அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து