முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி? - இன்று கடைசி ஒருநாள் போட்டியில் பலப்பரீட்சை

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2025      விளையாட்டு
India 2024-02-05

Source: provided

அகமதாபாத் : இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி  களமிறங்கவுள்ளது.

இந்தியா அசத்தல்...

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்  தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

கடைசி ஒருநாள் போட்டி.... 

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று (பிப்ரவரி 12) நடக்கிறது.

ஒயிட்வாஷ் ஆர்வத்தில்...

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் 'ஒயிட்வாஷ்' செய்யும் ஆர்வத்தில் உள்ளது. ரோகித் சர்மா கடந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார்.

நெருக்கடியில் கோலி...

அதே நேரத்தில் வீராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவதும் அவசியமாகும். முதல் போட்டியில் காயம் காரணமாக ஆடாத அவர் 2-வது போட்டியில் 5 ரன்னில் வெளியேறினார். இதனால் அவர் ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

110-வது போட்டி...

இரு அணிகளும் இன்று மோதுவது 110-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 109 ஆட்டத்தில் இந்தியா 60 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 44 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் சமனில் முடிந்தது. 3 போட்டிகளுக்கு முடிவு இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து