முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      இந்தியா
Train 2023-04-06

Source: provided

 புதுடில்லி: ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் நேற்று அதிகாலை முதல் முடங்கியுள்ளதாகப் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் ஐ.ஆர்.சி.டி.சி. தளம் நேற்று அதிகாலை முதல் முடங்கியுள்ளது. மேலும், ஐ.ஆர்.சி.டி.சி. செயலியும் முடங்கியதாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான புகைப்படங்களைப் பயனாளர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், அவசரமாக பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முயலும்போது இவ்வாறு இணையதளம் மற்றும் செயலி செயலிழந்தால் எவ்வாறு பயணம் மேற்கொள்வது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சில இடங்களில் ஐ.ஆர்.சி.டி.சி. தளம் வேலை செய்வதாகக் கூறப்படும் நிலையில், பலர் செயலி மற்றும் இணையதளம் முடங்கிய புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, ரயிலில் பயணம் செய்வதற்காக 80 சதவிகித பயணச்சீட்டுகள் ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில், நீண்ட நாள்களாக தட்கல் நேரத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. செயலி மிகவும் மெதுவாக செயல்படுவதாகவும், இதனால் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்ய முடிவதில்லை என்று தொடர்ந்து பயனர்கள் குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து