முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் எண் கொண்ட அட்டைகள் போலியாே? - தலைமை தோ்தல் ஆணையம் விளக்கம்

திங்கட்கிழமை, 3 மார்ச் 2025      இந்தியா
Election-Commision 2023-04-20

Source: provided

புதுடில்லி : வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல என இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தின் "சதியுடன்" பா.ஜ.க.  வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைச் சேர்ப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். பின்னர், ஒரே மாதிரியான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (இ.பி.ஐ.சி.) எண்களைக் கொண்ட மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் பட்டியல்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த நிலையில்,  இதுகுறித்து தோ்தல் ஆணையம் கூறியுள்ளதாவது:

வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல. சிலரின் வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இ.பி.ஐ.சி.) எண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவா்களின் பிறந்த தேதி, பேரவைத் தொகுதி மற்றும் வாக்குச்சாவடி உள்ளிட்ட பிற விவரங்கள் வேறுபட்டிருக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், எந்தவொரு வாக்காளரும் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் அந்தந்த தொகுதிகளில் அவரவருக்கென ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மட்டுமே வாக்களிக்க முடியும். அங்குதான் அவர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். வேறு எங்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து