முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரமலான் நோன்பு இன்று தொடக்கம்

சனிக்கிழமை, 1 மார்ச் 2025      ஆன்மிகம்
Ramzan

சென்னை, ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும். அந்த வகையில் நேற்று இரவு முதல் ரமலான் மாத முதல் பிறை ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டது.

முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இந்த மாதம் முழுவதும் நோன்பை கடைபிடிப்பார்கள். இஸ்லாமிய காலண்டரில் 9-வது மாதம் ரமலான் ஆகும். இந்த புனித மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்கியது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமை காஜி டாக்டர் சலாகுத்தீன் அய்யூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஹிஜ்ரி 1446 ஷாபான் மாதம் 29-ந்தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 28.2.2025 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் இன்று அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நோன்பு என்பது கிழக்கு வெளுத்ததில் இருந்து சூரியன் மறையும் வரை உண்ணுதல், பருகுதல் உள்பட நோன்பை முடிக்கும் காரியங்களை விட்டு ஒருவர் தன்னை தடுத்து கொள்வதாகும். புனித ரமலான் மாதத்தைzட்டி இரவில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். இந்த மாதம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். 

இந்த புனித மாதத்தில் முஸ்லிம்கள் தர்மம் எனும் ஜகாத்தில் ஈடுபடுவார்கள். மேலும் திருக்குர் ஆன் ஓதுதல், பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். ஒரு மாத கால நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து