முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறியது தி.மு.க. அரசு எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      தமிழகம்
eps

Source: provided

தேனி: போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தி.மு.க.  அரசு தவறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது; தேனி மாவட்டத்துக்கு தி.மு.க.  அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. 4 ஆண்டுகளில் தி.மு.க.  அரசு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. முல்லை பெரியாறு அணையை நம்பி 5 மாவட்ட மக்கள் உள்ளனர். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியது அ.தி.மு.க.  அரசு.  

அ.தி.மு.க.  ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்களே பாராட்டுகின்றனர். அ.தி.மு.க.  ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு நன்மை அளித்தது. ஏழை, எளிய மாணவர்கள் படிக்க ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன.

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தி.மு.க.  அரசு தவறிவிட்டது. போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தொடர்கதையாக உள்ளது. தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை நெஞ்சை பதறச் செய்கிறது. பெண்கள், பெண் குழந்தைகளுக்கான குற்றங்கள் அதிகரித்துள்ளன. சிறுமிகள் அப்பா.. அப்பா.. என்று கதறும்போது அப்பா ஸ்டாலின் எங்கே போனார்.

தமிழகத்தில் உயர் பதவியில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. அண்ணா பல்கலை. வழக்கில் யார் அந்த சார் என்பதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. தி.மு.க.  ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. முதல்வர் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் போட்டோஷூட் செய்து வருகிறார். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அல்ல.. ஸ்டாலின் மாடல்." இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து