முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.-குஜராத் இன்று மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      விளையாட்டு
Gill-2025-02-13

Source: provided

5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 14-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது. அங்கு 6 போட்டிகள் நடைபெற்றது. 2-ம் கட்ட போட்டிகள் பெங்களூரில் கடந்த 21-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. அங்கு 8 போட்டிகள் நடத்தப்பட்டன. இன்று முதல் லக்னோவில் போட்டிகள் ஆரம்பமாகின்றன. 

இன்று  (மார்ச் 3-ம் தேதி) லக்னோவில் நடைபெறும் 15-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 2 வெற்றி, 3 தோல்வியுடன் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் 3-வது வெற்றியை பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறி விட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. பெங்களூரு அணியும் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்னும் 2 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதற்கு கடும் போட்டி நிலவுகிறது. 

_________________________________________________________________________________________

13 முறை டாஸில் தோற்ற இந்தியா 

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள்  நேற்று பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டி துபாயில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 13 முறை டாஸில் தோற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் அதிக முறை டாசில் தோற்ற நெதர்லாந்து அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

2023ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை இறுதிப்போட்டி முதல்  நேற்று வரை நடந்த அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி டாசில் தொற்றுள்ளது. இதில் ரோகித் 10 முறையும், கே.எல்.ராகுல் 3 முறையும் டாசில் தோற்றுள்ளனர். 

_________________________________________________________________________________________

லுங்கி இங்கிடி புதிய சாதனை

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற  நேற்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜேன்சன் மற்றும் வியான் முல்டர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி மற்றும் ககிசோ ரபாடா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லரின் விக்கெட்டினைக் கைப்பற்றிய லுங்கி இங்கிடி, தென்னாப்பிரிக்க அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார். இதுவரை தென்னாப்பிரிக்க அணிக்காக 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள லுங்கி இங்கிடி 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் ஒரு ஐந்து விக்கெட்டும் அடங்கும். 58 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே அவரது சிறந்த பந்துவீச்சு என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து