முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒழுக்கத்துக்கு அடையாளமாக வாழ்ந்தவர்: மறைந்த குமரி அனந்தனுக்கு தே.மு.தி.க. சார்பில் புகழஞ்சலி

புதன்கிழமை, 9 ஏப்ரல் 2025      தமிழகம்
Pramalatha

Source: provided

சென்னை :  தமிழக அரசியலிலும், தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராத பற்று கொண்டவர். ஒழுக்கத்துக்கு அடையாளமாக வாழ்ந்தவர் என்று குமரி அனந்தன் மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: முன்னாள் ஆளுநரும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி அனந்தன் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழக அரசியலிலும், தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராத பற்று கொண்டவர். ஒழுக்கத்துக்கு அடையாளமாக வாழ்ந்தவர், நல்ல மனிதர், பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர், தமிழ் மீது தீராத பற்று கொண்டவர்.

தமிழகத்தில் பூரண மது ஒழிப்பை வலியுறுத்தி நடைபயணம் செய்தார், காங்கிரஸ் கட்சியில் மூத்த அரசியல்வாதியாக இருந்து இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தோம். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவர் சார்ந்த கழகத்தை சேர்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து