முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      சினிமா
Salman-Khan 2024-04-14

Source: provided

மும்பை : சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மராட்டிய அரசின் வோர்லி போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த மிரட்டல் செய்தி வந்துள்ளது.சல்மான் கானை அவரது இல்லத்திலேயே வைத்துக் கொன்றுவிட்டு, அவரின் வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வோர்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சல்மான் கான் கடந்த 1998-ம் ஆண்டில் ராஜஸ்தானில் படப்பிடிப்புக்கு சென்றிருந்தார். அப்போது, அரிய வகை பிளாக்பக் மான்களை வேட்டையாடியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றத்தை நாடி சல்மான் கான் ஜாமீன் பெற்றார். பிஷ்னோய் மக்களின் குருவான 16 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறுவடிவமாக பிளாக்பக் மான்கள் கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சல்மான் கானை கொலை செய்வதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. பலமுறை வெளிப்படையாக கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். மத்திய அரசு தரப்பில் சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து