முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2025      ஆன்மிகம்
Tirupati 2023-09-30

Source: provided

திருப்பதி : திருப்பதி கோவிலில்  12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தொடர் விடுமுறையால் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ், கார், வேன் மூலம் வந்து செல்கின்றனர். பக்தர்கள் அதிக அளவில் வாகனங்களில் வருவதால் அலிபிரியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. எனவே திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை திருப்பதியில் நிறுத்திவிட்டு அரசு பஸ்ஸில் வந்து செல்ல தேவஸ்தான அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி வருகின்றனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்ட பொருட்களை தன்னார்வலர்கள் மூலம் வழங்கி வருகின்றனர். திருப்பதியில் நேற்று 73,543 பேர் தரிசனம் செய்தனர். 21,346 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.22 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து