முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் மசோதா நிராகரிப்பு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

புதன்கிழமை, 9 ஏப்ரல் 2025      தமிழகம்
CM Stalin 2024-12-10

Source: provided

சென்னை : நீட் மசோதா நிராகரிப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வசதி படைத்த.... 

சென்னை தலைமைச் செயலகத்தில் நீட் விலக்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,  நீட் தேர்வு பயிற்சி மையங்களின் நன்மைக்காக, சிலரின் சுயநலனுக்காக கொண்டுவரப்பட்டது. வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு சாதகமாக உள்ளது. 

அனைத்து முயற்சி...

பல தரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்திருக்கிறது. 13.09.2021-ல் நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்வடிவை முன்மொழிந்தேன். அதைத் தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு மசோதாவை கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் அரசியல் செய்தார். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக கவர்னர், பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். 08.02.2022-ல் 2-வது முறையாக நீட் விலக்கு சட்ட முன்வடிவு நிறைவேற்றி அனுப்பப்பட்டது. நீட் விலக்கு போராட்டத்தில் அடுத்த கட்டமாக நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். 

மசோதா நிறைவேற்றம்...

நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடி வருகிறோம். மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு தமிழக மாணவர்களை வெகுவாக பாதித்தது. மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறித்துக் கொண்டது. மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளின்படி, நீட் விலக்கு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைத்தோம்.

சட்டப்போராட்டம்...

மருத்துவத்துறையில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது தமிழ்நாடு. பொருளாதார வளமிக்கவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு சாதகமாக உள்ளது என்பதையே ஏ.கே.ராஜன் குழு குறிப்பிட்டது. சட்ட போராட்டத்தை தொய்வின்றி தொடர்ந்தால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தீர்மானம் நிறைவேற்றம்...

நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து சட்டப்போராட்டத்தை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து சட்ட போராட்டம், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு தொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை துணை முதல்வர் உதயநித ஸ்டாலின் வாசித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து