முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காட்பாடி - திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் வழிப்பாதை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதன்கிழமை, 9 ஏப்ரல் 2025      இந்தியா
Tairn 2023-05-25

Source: provided

டெல்லி : காட்பாடி - திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரெயில் வழிப்பாதையை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின்படி, ரூ. 1,332 கோடி மதிப்பில் 104 கி.மீ. தொலைவிலான ஒற்றை ரயில் வழிப்பாதையானது, இரட்டை வழிப்பாதையாக மாற்றப்படவுள்ளது. இதுகுறித்து அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே, திருப்பதி - பாக்காலா - காட்பாடி இடையேயான ஒற்றை ரயில் பாதையை ரூ. 1,332 கோடியில் இரட்டை வழிப்பாதையாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாநிலங்களில் உள்ள மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டத்தின் மூலம், இந்திய ரயில்வேவின் பாதை 113 கி.மீ. அதிகரிக்கும். 400 கிராமங்களைச் சேர்ந்த 14 லட்சம் மக்கள் பயனடைவார்கள். இருவழிப் பாதை அமைக்கப்பட்டால் நிலக்கரி, விவசாயப் பொருள்கள், சிமெண்ட் என ஆண்டுக்கு 40 லட்சம் டன் சரக்குகள் கூடுதலாக கையாள முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து