முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை பனையூரில் விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      தமிழகம்
Vijay- 2024-06-28

சென்னை, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-வது ஆண்டு துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. அதில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என விஜய் அறிவுறுத்தியிருந்தார்.

இதனை தொடர்ந்து, மாநில கட்சிகளுக்கு இணையாக மாவட்ட வாரியாக பூத் கமிட்டிகளை அமைக்க த.வெ.க. திட்டமிட்டுள்ளது. முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சியின் நிர்வாக பணிகளுக்காக அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களின் பூத் கமிட்டிகளுக்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து