முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்காள்-தங்கை விஷம் குடித்த விவகாரம்: இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      தமிழகம்
Suicide 2023 04 29

தஞ்சாவூர், போலீஸ் நிலையம் முன்பு அக்காள்-தங்கை விஷம் குடித்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சர்மிளா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூரை அடுத்த நடுக்காவேரி அரசமர தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு தினேஷ்(வயது 32) என்ற மகனும், துர்க்கா, மேனகா (31), கீர்த்திகா(29) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இவர்களில் துர்க்காவுக்கு திருமணமாகி விட்டது. என்ஜினீயரிங் பட்டதாரியான கீர்த்திகா அரசு பணி தேர்வுக்காக படித்து வந்தார்.

3 நாட்களுக்கு முன்  காலை தினேசின் மாமா இறந்து விட்டார். இதனால் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நடுக்காவேரி பஸ் நிறுத்தத்தில் தினேஷ் உறவினர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், ஒரு வழக்கு விசாரணைக்காக வர வேண்டும் எனக்கூறி தினேசை மோட்டார் சைக்கிளில் நடுக்காவேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

சப்-இன்ஸ்பெக்டரை பின் தொடர்ந்து தினேசின் உறவினர்களும் நடுக்காவேரி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது மேனகா, கீர்த்திகா ஆகியோர் தங்கள் அண்ணன் மீது பொய் வழக்கு போடாமல் அவரை உடனடியாக விட வேண்டும் என்று கூறினர்.

ஆனால் தினேஷ் மீது பொது இடத்தில் கத்தியை காட்டி மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்ததாக கூறியதுடன் மேனகா, கீர்த்திகா ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த இருவரும் வீட்டிற்கு சென்று எள் பயிருக்கு தெளிக்க வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) எடுத்து வந்து நடுக்காவேரி போலீஸ் நிலையம் முன்பு வைத்து குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

இதனையடுத்து சகோதரிகள் இருவரையும் உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினர் மீட்டு நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு 2 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கீர்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார். மேனகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், போலீஸ் நிலையம் முன்பு அக்காள்-தங்கை விஷம் குடித்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சர்மிளா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து