முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணிநீக்க விவகாரம்: மேற்குவங்காளத்தில் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      இந்தியா
West-Bengal

கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துவுள்ளதாகக்கூறி 2024-ம் ஆண்டு சுமார் 25,753 ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களை கொல்கத்தா உயர் நீதிமன்றம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டபோது கொல்கத்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அங்கு உறுதி செய்யப்பட்டது.

இந்தத் தீர்ப்பினால் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுடன் ஈடுபடாத ஆசிரியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் நேற்று (ஏப்.10) தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்தப் போராட்டத்தில் நேற்று முன்தினம் (ஏப்.9) தெற்கு கொல்கத்தாவில் மேற்கு வங்க பள்ளிக்கல்வி ஆணையத்தின் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து