முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் தோல்வி எதிரொலி: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் சென்னை அணிக்கு மேலும் சிக்கல்?

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      விளையாட்டு
CSK team 2024-03-27

Source: provided

சென்னை: தொடர் தோல்வி காரணமாக ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் சி.எஸ்.கே. அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

தொடர் தோல்வி...

நடப்பு ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் நான்கு அணிகள் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சூழலில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், சி.எஸ்.கே. அணியும் இந்தத் தொடரில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகின்றன. மும்பை அணி 8-வது இடத்திலும், சி.எஸ்.கே. அணி 9-வது இடத்திலும் உள்ளன.

ஒரு வெற்றி மட்டுமே... 

இந்நிலையில் சி.எஸ்.கே. அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் இன்னும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதைப் பார்க்கலாம். ஐ.பி.எல். தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, 16 புள்ளிகளைப் பெற வேண்டும். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

முன்னேறுவதில் சிக்கல்?

இதனால், சி.எஸ்.கே. அணிக்கு இன்னும் ஒன்பது போட்டிகள் உள்ளன. இந்த ஒன்பது போட்டிகளில் குறைந்தபட்சம் ஏழு போட்டிகளிலாவது சி.எஸ்.கே. வெற்றி பெற வேண்டும். அப்படி ஏழு போட்டிகளில் வென்றால் மட்டுமே சி.எஸ்.கே. அணியின் புள்ளிகள் 16 என்ற அளவை எட்டும். ஆனால், தற்போது சி.எஸ்.கே. இருக்கும் நிலையைப் பார்க்கும்போது, இது மிகவும் கடினமாகத் தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து