முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். தொடரில் தொடரும் சாய் சுதர்சனின் பல சாதனைகள்

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      விளையாட்டு
Sai-Sudarsan 2024-11-17

Source: provided

அகமதாபாத்: ஐ.பி.எல். தொடரில்  தமிழக வீரர் சாய் சுதர்சன் பேட்டிங்கில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.

தமிழக வீரர்...

தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஐ.பி.எல். சீசனில் மட்டும் 273 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். 288 ரன்களுடன் நிகோலஸ் பூரன் முதலிடத்தில் இருக்கிறார். ஒட்டுமொத்தமாக 30 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 1,307 ரன்களை எடுத்துள்ளார். இதில் 9 அரைசதங்கள், 1 சதத்துடன் சராசரி 48.41ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு ஸ்டிரைக் ரேட்டில் கவனம் செலுத்தி வரும் சாய் சுதர்சன் 141.61ஆக விளையாடுவது குஜராத் அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது.

டி வில்லியர்ஸ் சாதனை சமன்...

ஒரே திடலில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸுடன் சமன்செய்துள்ளார். அதாவது அகமதாபாத் திடலில் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் சுதர்சன் 84*, 103, 74, 63, 82 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்பாக ஏபி டி பெங்களூரில் 90*, 68, 69, 70*, 63 ரன்கள் எடுத்திருந்தார்.

அதிக சராசரி...

ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்தபட்சம் 1,000 ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் அதிக சராசரியுடன் முதலிடம் பிடித்துள்ளார். சாய் சுதர்சன் - 48.41, டெவான் கான்வே - 47.90, கே.எல்.ராகுல் - 45.47, டேவிட் வார்னர் - 40. 42, ருதுராஜ் கெய்க்வாட் - 40.35

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து