முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசரங்கா இல்லாதது இழப்பு:முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      விளையாட்டு
Wasim-Zafar 2023-12-10

Source: provided

அகமதாபாத்: சுழல் பந்துவீச்சாளர் ஹசரங்கா இல்லாதது ராஜஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

ஹசரங்கா இல்லை...

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 217/6 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் ராஜஸ்தானின் முக்கியமான சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா பங்கேற்கவில்லை. தனிப்பட்ட காரணங்களினால் பங்கேற்கவில்லை என சஞ்சு சாம்சன் தெரிவித்திருந்தார். அவருக்குப் பதிலாக அணியில் இணைந்த பசல்லஹ் பரூக்கி 4 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 38 ரன்களை கொடுத்தார். சஞ்சு சாம்சன் 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மிஸ் செய்தது... 

இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் இது குறித்து கூறியதாவது: மிடில் ஓவரில் விக்கெட் எடுக்கும் ஹசரங்காவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் மிஸ் செய்தது .மற்றுமொரு சுழல் பந்து வீச்சாளரான தீக்‌ஷனா 2 விக்கெட்டுகள் எடுத்தாலும் அவரால் எதிரணிக்கு எந்த அழுத்தத்தையும் அளிக்க முடியவில்லை. தீக்‌ஷனா, துஷார் தேஷ்பாண்டே தலா 50க்கும் அதிகமான ரன்களை வாரி வழங்கினார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து