முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.- அ.தி.மு.க. கூட்டணி: முத்தரசன் கடும் விமர்சனம்

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      தமிழகம்
Mutharasan

Source: provided

சென்னை : பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது வியப்பாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துவிட்டது. அந்த வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. 

இந்நிலையில், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது வியப்பாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்  கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது.

தேர்தலில் பா.ஜ.க.வுடன்தான் கூட்டணி. இந்த கூட்டணிதான் விடியலையும், வெளிச்சத்தையும் தரப்போகிறது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவது வியப்பாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. அ.தி.மு.க. தொண்டர்கள் இந்த கூட்டணியை விரும்பவில்லை. பா.ஜ.க. நயவஞ்சகமான கட்சி. நயவஞ்சகமான உறவை வைத்து அந்த உறவை பயன்படுத்தி எந்த கட்சியோடு உறவு வைத்துள்ளதோ அந்த கட்சியை அழிப்பதுதான் பா.ஜ.க.வின் வேலை. அந்த வகையில் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுத்து நிர்பந்தபடுத்தி பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. இது இயல்பான கூட்டணி இல்லை. அமலாக்கத்துறையின் சோதனை மிரட்டலுக்கு பயந்து எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்' என்றார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து