முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பென்சில் கேட்டதால் மாணவனுக்கு அரிவாள் வெட்டு: காவல்துறை விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      தமிழகம்
blood--2025-04-15

திருநெல்வேலி, இரு மாணவர்களுக்கு இடையேயான மோதல் விவகாரத்தில் பென்சில் கேட்டதால்தான் அரிவாள் வெட்டுக்குக் காரணம் என்று பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவனை, சக மாணவன் அரிவாளால் வெட்டியது குறித்து பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஏற்கனவே பென்சில் கேட்டதில் ஏற்பட்டதாகக் காரணமாகவே மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 3 இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க சென்ற ஆசிரியருக்கும் லேசான வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நலமுடன் உள்ளனர். மாணவன் புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்து அரிவாளைக் கொண்டு வந்துள்ளார். இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து