முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதிகள் குறித்த தகவல் கொடுபோருக்கு ரூ.20 லட்சம் காஷ்மீர் காவல் துறை அறிவிப்பு

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      இந்தியா
India-Border 2023-06-08

Source: provided

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ள ஜம்மு - காஷ்மீர் மாநில காவல் துறை, அவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் எனும் அழகிய பள்ளத்தாக்கில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதில், 26 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக தேசிய புலனாய்வு அமைப்பும் களத்தில் இறங்கி உள்ளது. பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவமும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் வரைபடங்கள் மற்றும் பெயர்களை ஜம்மு - காஷ்மீர் காவல் துறை நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. ஆதில் உசேன் தோக்கர் (அனந்த்நாக் பகுதியில் வசிப்பவர்), ஹாஷிம் மூசா என்கிற சுலைமான், அலி பாய் என்கிற தல்ஹா பாய் என மூன்று பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தப்பியோடிய இந்த பயங்கரவாதிகள் குறித்த தகவல் அளிப்போருக்கு ரூ.20 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று போலீஸார் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, பஹல்காம் பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். பிஹாரின் மதுபானி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் சதிகாரர்கள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள். ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா அடையாளம் கண்டு, கண்காணித்து, தண்டிக்கும் என்று நான் முழு உலகிற்கும் கூறுகிறேன். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் நாங்கள் அவர்களை விட மாட்டோம். அவர்களுடைய மீதமுள்ள மண்ணைப் பறிக்கும் நேரம் வந்துவிட்டது. கார்கில் முதல் கன்னியாகுமரி வரை முழு நாடும் இந்த பயங்கரவாதத் தாக்குதலால் கவலையாக, கோபமாக உள்ளது. இந்தச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து