முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிராமணர்கள் குறித்த அவதூறு கருத்து: மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      சினிமா
Anurag-Kashyap 2025-04-22

Source: provided

டெல்லி : பிரமாணர் சமூகம் குறித்த கருத்துக்கு மீண்டும் மன்னிப்புக் கோரியிருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.

புலே பட சர்ச்சை தொடர்பாக, அனுராக் கஷ்யாப் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. அவரது கருத்துகள் பிராமண சமூகத்தினர் மத்தியில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக அனுராக் காஷ்யப் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.

இதனிடையே மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் மன்னிப்புக் கேட்டுள்ளார் அனுராக் கஷ்யாப். இது தொடர்பாக, “கோபத்தில், ஒருவருக்கு பதிலளிக்கும் போது என் வரம்புகளை மறந்துவிட்டேன். முழு பிராமண சமூகத்தைப் பற்றியும் மோசமாகப் பேசிவிட்டேன். என் வாழ்க்கையில் பல நண்பர்கள் அந்த சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது. நேற்று அவர்கள் அனைவரும் என்னால் காயப்பட்டுள்ளார்கள். என் குடும்பம் என்னால் காயப்படுத்தப்படுகிறது. நான் மதிக்கும் பல அறிவுஜீவிகள், என் கோபத்தாலும் என் பேச்சு முறையாலும் காயப்படுகிறார்கள்.

இப்படிச் சொன்னதன் மூலம், நானே என் சொந்தக் கண்ணோட்டத்திலிருந்து விலகிவிட்டேன். இந்த சமூகத்திடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் யாரோ ஒருவரின் மலிவான கருத்துக்கு பதிலளிக்கும் போது கோபத்தில் அதை எழுதினேன். நான் பேசும் விதம் மற்றும் அவதூறான வார்த்தைகளுக்காக எனது நண்பர்கள், என் குடும்பத்தினர் மற்றும் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்போது இது மீண்டும் நடக்காமல் இருக்க, என் கோபத்தை நான் சரி செய்வேன். இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேச வேண்டியிருந்தால், சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் அனுராக் காஷ்யப்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து