முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முடிவுக்கு வந்த 65 ஆண்டு கால ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை நிறுத்தியது இந்தியா

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, முடிவுக்கு வந்தது 65 ஆண்டு கால சிந்து நதி நீர் ஒப்பந்தம். இதனை அடுத்து பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை நிறுத்தியுள்ளது இந்தியா.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம்மில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது.

அதன் ஒருபகுதியாக, பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளது. சிந்து நதிநீர் பின்னணியில் ஒரு வரலாறே உள்ளது. அதாவது, சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் இந்தியா - பாகிஸ்தான் இடையே 1960-ம் ஆண்டு கையெழுத்தானது. உலக வங்கியின் முழு முயற்சியால் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனாலும், 65 ஆண்டு காலமாக எந்தவித சிக்கலும் இல்லாமல் சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தம் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ஆனால், இப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்தியா தண்ணீரையே ஆயுதமாக கையில் எடுத்துள்ளது. அந்த வகையில், 65 ஆண்டு கால சிந்து நதிநீர் ஒப்பந்தம் இப்போது கைவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில், உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம்தான் 22.7 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. 37.4 சதவீத பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது. சிந்து நதிதான் நாட்டின் 90 சதவீத உணவு பயிர்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. அதன் மூலமே 2022-ம் ஆண்டு அரிசி, கோதுமை, பருத்தி ஆகியவற்றை உற்பத்தி செய்து 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. எனவே, இதன் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பாகிஸ்தானில் 4 மாகாணங்களில் 2 மாகாணங்கள் சிந்து நதியை நம்பியே உள்ளது. விவசாயம் மற்றும் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக சிந்து நதி உள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளதால் இதன் கீழ் நிர்வகிக்கப்பட்ட மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய ஆறுகளில் இருந்து வெளியேறும் நீரை இந்தியா நிறுத்த வாய்ப்புள்ளது.

இந்த வகைகளில் பாகிஸ்தானுக்கு முக்கியமாக உள்ள சிந்து நதி மூலம் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. இதனால்தான் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் தற்போது விவசாய பணிகளுக்கான விதைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் இந்தியா எடுத்துள்ள இந்த முடிவு பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.  

 

பாகிஸ்தானின் நீர்ப் பாசன தேவையில் 93 சதவீதம் தண்ணீர் சிந்து நதி ஒப்பந்தம் மூலம் கிடைக்கிறது. சிந்து நதி படுகையில்தான் 61 சதவிகித பாகிஸ்தானியர்கள் வாழ்கின்றனர். பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை தண்ணீர் வழங்கப்படாது என மத்திய அரசு நேற்று அறிவித்திருந்த நிலையில் ராம்பன் அணையின் மதகுகளை தற்போது மூடி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து