முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுதம் காம்பீருக்கு கொலை மிரட்டல்

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      இந்தியா
Gambhir 2023 09 14

Source: provided

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. முன்னாள் எம்.பி.-யும், இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கவுதம் காம்பீருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்' என்ற அமைப்பிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக காம்பீர் புகார் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார். காம்பீருக்கு இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து