முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் பலி

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்திலுள்ள வசந்த்கார் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அம்மாநில காவல் துறையினர் மற்றும் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வொய்ட் நைட் கார்ப்ஸ் பிரிவினர் இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் நேற்று (ஏப்.24) ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையின்போது பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஹவில்தார் ஜாந்து அலி எனும் ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜாந்து அலியை மீட்க மருத்துவ முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த ஏப்.22-ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து