Idhayam Matrimony

வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் இனி 3 ஆண்டுகள் சிறை: சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      தமிழகம்
Udayanidhi-1 2023-10-15

சென்னை, வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

கடன் பெற்றவர்களிடம் கடனை வலுக்கட்டாயமாக வசூல் செய்வதை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 26-ம் தேதி சட்டசபையில் அறிமுகம் செய்தார். இந்த மசோதா நேற்று விவாதத்திற்கு விடப்பட்டது. அதனை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலைசெய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.  20-ம் பிரிவில் கூறப்பட்டுள்ள மிரட்டுதல், பின் தொடருதல் போன்ற குற்றங்களைச் செய்தால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும்.  கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை, அதாவது அவரின் பெற்றோர், கணவர் அல்லது மனைவி, குழந்தைகள் ஆகியோரை கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக்கூடாது. ஏற்கெனவே நிதி சுமையில் இருக்கும் கடனாளிகளிடம் இருந்து கடன்களை வசூலிக்க சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க இம்மசோதா வகைசெய்யும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து